குழந்தை நட்சத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட அட்ஜஸ்ட்மென்ட் Torture.. அவரே வெளியிட்ட உண்மை..!

Author: Vignesh
11 May 2024, 10:54 am

சென்னையில் பிறந்த சரண்யா நாக் 1998 ஆம் ஆண்டு அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்த இவர் காதல் படத்தின் மூலம் அனைவரிடத்திலும் பிரபலம் அடைந்தார்.

saranya nag-updatenews360

மேலும் படிக்க: செல்வராகவன் கெட்ட வார்த்தையில் திட்டுனாரு.. மனசு கேட்கல.. படத்தை விட்டு வெளியேறிய சீனியர் நடிகர்..!

காதல் திரைப்படத்திற்கு பின்னர் இவர் ஒரு சில படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் ஒரு வார்த்தை பேசு என்ற படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி, ஒரு சில காரணங்களால், இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் தெலுங்கில் இவர் டென்த் கிளாஸ் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்த படமும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறவில்லை.

saranya nag-updatenews360

மேலும் படிக்க: TR தாடியோட இருக்க இதுதான் காரணமாம்.. பலரும் அறிந்திடாத விஷயம்..!

அதன் பின்னர் சரண்யா 2009 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். அதன் பின்னரும் இவருக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இறுதியாக இவர் 2015 ஆம் ஆண்டு ஈர வெயில் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இடையில், இவர் ஒரு சில குறும்படங்களிலும் நடித்திருந்தார். இவர் எங்கு இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில், இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

saranya nag-updatenews360

அதில், சரண்யா நாக் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். தான் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்து இருப்பதாகவும், அப்போதிலிருந்தே தனக்கு பாலியல் தொல்லைகள் நடந்துள்ளது என்றும், தன்னிடம் பெரிய அளவில் காசு இல்லாததாலும், தன்னுடன் அம்மா, அப்பா என யாரும் உடன் இல்லாததால் பல நேரங்களில் ஆண்கள் தன்னிடம் எல்லை மீறி நடக்க முயற்சி செய்தார்கள் என்று சரண்யா பகீர் தகவலை கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 411

    0

    0