‘புஷ்பா’ பட நடிகையின் ஆபாச படம்.. சம்பந்தப்பட்ட நபரை தட்டி தூக்கிய போலீஸ்..!
Author: Vignesh29 November 2022, 7:00 pm
பல தெலுங்கு படங்களில் முன்னணி குணச்சித்திர நடிகையாக நடித்து வரும் அனுசுயா பரத்வாஜ் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்ட நபரை தற்போது போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைக்காட்சியில் இருந்து வந்து வெள்ளித்திரையில் சாதிப்பது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம். அந்த வகையில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறி தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளவர் அனுசுயா பரத்வாஜ்.
தெலுங்கு திரையுலகில், தொடர்ந்து முன்னணி நடிகர்கள் நடித்த ரங்கஸ்தலம், யாத்ரா, புஷ்பா, போன்ற பல படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வெளிப்படுத்தியுள்ளார் இவர், தற்போது புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார்.
மனதில் பட்டத்தை பளீச் என பேசி, சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் அனுசுயா சமீபத்தில் கூட பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’படத்தை மறைமுகமாக விமர்சித்து, அவருடைய ரசிகர்களின் கோபங்களுக்கு ஆளாகினர். எனவே விஜய் தேவரகொண்டா ரசிகர்களும் இவரை ‘ஆண்ட்டி ‘ என அழைத்து கடுப்பேற்றினர்.
ஒரு நிலையில், தன்னை ஆண்ட்டி என அழைத்தால், அவர்களது சமூக வலைதள பக்கங்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்து கொண்டு அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் என எச்சரித்தார். இந்த விஷயம் ஒருவழியாக ஓய்ந்த நிலையில், தன்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக யாரோ வெளியிட்டு வருவதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார்.
இது குறித்த விசாரணை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் ஆந்திர மாநிலம் பசலபுடி கிராமத்தைச் சேர்ந்த ராம வெங்கட்ராஜு என்பவர், இதுபோல் நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பில் செய்து வெளியிடுவது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது, அவருடைய மடிக்கணினியில் சில நடிகைகளின் புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இவர்தான் இது போன்ற தகாத செயலில் ஈடுபட்டார் என தெரியவந்த பின்னர், அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்து சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.