தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது வயசு 73 நெருங்கியும் கூட இன்னும் அதே இளமை மாறாமல், ஸ்டைல் மாறாமல், தோற்றம் வராமல் அப்படியே இருந்து வருகிறார். தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து இளம் ஹீரோக்களுக்கே ஸ்டஃப் கொடுக்கும் வகையில் ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக நடித்து வருகிறார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்ப படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் ஞானவேல் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லைக்கான நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க ராக் ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
இப்படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடிகர் அமிதாபச்சன் மற்றும் மஞ்சு வாரியர், பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திக் ரோஷன், ரித்திகா சிங் உள்ள முக்கிய பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் மும்முரமாக தயாராகி விரைவில் ரிலீஸை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதும் ரஜினிகாந்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் .
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரஜினி சூப்பர் ஸ்டார் என தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் ரஜினி குறித்த எந்த விஷயம் வெளியானாலும் அது வைரல் ஆகிவிடும். அந்த வகையில் தற்போது அச்சு அசல் ரஜினிகாந்தை போலவே இருக்கும் நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
அதில் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் வரும் கெட்டப்பில் அந்த நபர் அதே ஸ்டைல்…அதே நடையோடு வந்து மெர்சல் ஆக்கிவிட்டார். இது ரஜினி தான்? அது வேறொரு நபர் இல்லை என சொல்லும் அளவிற்கு அவ்வளவு தத்ரூபமாக அச்சு அசல் ரஜினியை போலவே செம ஸ்டைலாக நடந்து வருகிறார். இந்த வீடியோ தற்போது தீயாய் பரவி இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாரு சாமி நீ 😁 pic.twitter.com/QemlFCgdIa
— ᴋᴏʟʟʏᴡᴏᴏᴅ ᴛᴀʟᴋs (@kollywoodtalks) August 18, 2024