அமரன் திரையிடப்பட்ட தியேட்டர் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!

Author: Hariharasudhan
16 November 2024, 10:15 am

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் அமரன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், சாய்பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் அமரன். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார்.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி பயோபிக் படமாக வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேநேரம், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற நிகழ்வுகளின் பின்னணியைப் படம் கொண்டிருப்பதால், சிலர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

NELLAI ALANGAR CINEMAS

இந்த நிலையில், நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் அமரன் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனிடையே, இன்று (நவ.15) அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர், இந்த திரையரங்கின் முன்பகுதியில் பெட்ரோல் குண்டை வீசிச் சென்று உள்ளனர்.

இதையும் படிங்க: எட்டி உடைத்த நடிகர்…. கதறி அழுத சினேகா – தனுஷ் படத்தில் இவ்வளவு கொடுமையா?

இதனையடுத்து திரையரங்க நிர்வாகம் தரப்பில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், திரையரங்கின் சிசிடிவி காட்சிப் பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Tamil cinema re-release movies ரஜினி,விஜயை தொடர்ந்து ரீ-ரிலீஸில் குதிக்கும் பிரபல நடிகர்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!