மாட்டிக்கிட்டே பங்கு.. விஜய்யின் ஷர்டை அணிந்து வந்த திரிஷா.. கலாய்த்த நெட்டிசன்ஸ்..!
Author: Vignesh22 March 2024, 12:57 pm
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் நடிகை திரிஷா சினிமாவில் பிஸியாக வலம் வருகின்றார். சினிமாவில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் அப்படி சென்சேஷனலாக இருக்கிறார். அதற்கு காரணம், அவர் மீது அவர் மீது எழும் விமர்சனங்கள் தான். மன்சூர் அலிகான் முதல் பிரபல கட்சித் பிரமுகர் வரை திரிஷாவை அவதூறாக பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் பெரிசாக வெடித்தது.
இதனை தொடர்ந்து, பல்வேறு விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் தன்னுடைய படங்களின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வரும் திரிஷா. அஜித்தின் விடாமுயற்சி கமலின் Thug life போன்ற படங்களில் நடித்து வருகிறார். தற்போது, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் விஷ்வம் பரா என்ற படத்தில் நடித்துள்ளார். 68 வயது நடிகருடன் ரொமான்ஸா என்று சில விமர்சனங்களும் வந்தன.
தற்போது, சிரஞ்சீவி மற்றும் இசையமைப்பாளர் கீரவாணிவுடன் எடுத்த புகைப்படத்தை த்ரிஷா பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் அணிந்துள்ள சட்டை தான் தற்போது, ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அதாவது, விஜய் அவர் அணிந்திருந்த நீலநிற சட்டையை போல் த்ரிஷா போட்டு இருப்பது தான். தற்போது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை அப்படி இருக்குமோ என்று ரசிகர்கள் கிண்டல் செய்தும் வருகின்றனர். எதார்த்தமாக திரிஷா டெனிம் ஷர்டில் வர விஜய் அதே நிற ஷர்டில் இருக்கும் புகைப்படத்துடன் இணைத்து நெட்டிசன்கள் இணையத்தையே இரண்டாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.