பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் விக்ரமன். இவர் ஊடகவியலாளராக இருந்து பின்னர் அரசியலில் இறங்கி விடுதலை சிறுத்தை கட்சியில் இணை செய்தி தொடர்பாளராக உள்ளார். அக்கட்சியின் மூலம் தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது என்ற தகவல் வெளியாகியது. அந்த நிகழ்ச்சியில் சமூக நலன் சார்ந்த பல கருத்துக்களை பேசி நல்லவர் போல் நடித்து வேஷம் போட்டு தான் மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடித்தார் விக்ரமன் என பல சமூகவலைதளவாசிகள் கொந்தளித்துள்ளார்கள்.
ஆம், விஷயம் என்னவென்றால், சில நாட்களுக்கு முன்பு கிருபா முனுசாமி என்ற வழக்கறிஞர் பெண் விக்ரம் தன்னை காதலித்து ஒரு கணவன் மனைவியைப் போல குடும்பம் நடத்துவதாக என்னை உணர வைத்து, ஜாதிய ரீதியில் அசிங்கமாக பேசி, இதுவரையிலும் 12 லட்சத்திற்கு மேல் பணம் பறித்து, உளவியல் ரீதியாக என்னை சிதைத்து தற்கொலை செய்துகொள்ள தூண்டிய விக்ரமன் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு பரபரப்பை கிளப்பினார்.
மேலும் தன்னிடம் இருந்து ஐபோன், ஆப்பிள் வாட்ச், ஏர்போட்கள் பல பொருட்டுகளை வாங்கியுள்ளார். அத்துடன் விக்ரமன், தன்னுடைய மேனேஜர் என்று ஒரு பெண்ணை எனக்கு அறிமுகம் செய்துவிட்டு , அந்த பெண்ணுடன் தாகத உறவில் இருந்தார். இந்த விஷயம் கடைசியில் எனக்கு தெரியவந்தது. என்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்தது போன்று சுமார் 15க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உறவில் இருந்துள்ளார் எனக்கூறி விக்ரமன் பெண்களுடன் லீலை செய்த ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த உண்மை விவகாரம் தெரிந்ததும் இவருக்கா பிக்பாஸில் வாய்ப்பு கொடுத்தீர்கள்? என பலர் விமர்சித்தனர்.
தொடர்ந்து அந்த பெண், கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் துறையில் புகார் அளித்தார். அதாவது, என்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் 13.7 லட்சம் வரை பணம் பெற்றார். அதில் 12 லட்சம் வரை திருப்பி கொடுத்தார். இதுவரை 1.7 லட்சம் கொடுக்கவில்லை எனவே விக்ரமன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எனக்கு நீதி வழங்க வேண்டும் என புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் விக்ரமன் மீது கற்பழிப்பு, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆஜரான விக்ரமனிடம் 13 பிரிவுகளின் கீழ் பதிவான வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு பதிலளித்த அவர், என் மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பி பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு எப்போது கூப்பிட்டாலும் நான் ஆஜராக தயார் என கூறினாராம். விசாரணை முடிந்ததும் வெளியில் வந்த விக்ரமனை மீடியாக்கள் படம்பிடிக்க முயற்சித்தபோது அவர் முகத்தை மறைத்துக்கொண்டு காரில் வேகமாக ஏறி கிளப்பியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்ஸ் பிக்பாஸில் டைட்டில் ரன்னருக்கு இப்படி ஒரு நிலைமையா? என வருத்தப்பட்டு வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.