முதல் பாகத்தோடு விட்டுருக்கலாம்…. மொக்கை வாங்கிய பிச்சைக்காரன் 2 – திரைவிமர்சனம்!

Author: Shree
19 May 2023, 6:12 pm

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரமெடுத்தவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நான் திரைபடத்தில் நடித்து ஹீரோவானார். குறிப்பாக சினிமாவில் தொழிலை மாற்றுவார்கள் அதன் பின்னர் பெரிதாக அடையாளம் தெரியாமல் போய்விடுவார்கள். ஆனால், விஜய் ஆண்டனி விஷயத்தில் அப்படி இல்லை. அவருக்கு நடிப்பு தொழில் நல்லாவே கைகொடுத்தது.

2016 இல் வெளிவந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தயாரிப்பு, நடிப்பு, இசை, இயக்கம் என அனைத்து பணிகளையும் விஜய் ஆண்டனியே மேற்கொண்ட இப்படத்தில் காவ்யா தாப்பர், யோகிபாபு, ஜான் விஜய், மன்சூர் அலிகான், ஹரீஷ் பரேடி, ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் விமர்சனம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கதைக்கரு:

பிச்சைக்காரன் பணக்காரனாக மாற என்னவெல்லாம் மாற்றங்கள் நடக்கிறது என்பதே கதை.

கதைக்களம்:

இந்தியாவின் டாப் பணக்காரர்களில் ஒருவரான விஜய் குருமூர்த்தி ( விஜய் ஆண்டனி) ரூ. 1 லட்சம் கோடிக்கு சொந்தக்காரராக இருக்கிறார். இவரது சொத்துக்களை அபகரிக்க அவரது நண்பரும் விஜய் குருமூர்த்தி கம்பெனியின் CEOவுமான அரவிந்த் திட்டம் தீட்டி வருகிறார்.

விஜய் குருமூர்த்தியின் மூளையை வேறு பிச்சைக்காரன் சத்யாவுக்கு பொறுத்தி சதித்திட்டத்தை ஆரம்பிக்கிறார்கள். இதில் சிறு வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்து தங்கையுடன் நடு ரோட்டிற்கு வந்து பிச்சையெடுக்கும் சத்யா தனது தங்கையை தொலைத்து விடுகிறார். தங்கையை தேடி திரிந்துக்கொண்டிருந்த பிச்சைக்காரர் சத்யா மூளை தற்போது இந்தியாவின் 7வது பணக்காரன் விஜய் குருமூர்த்தியின் உடலில் பொருத்தப்பட்டு விஜய் குருமூர்த்தியாக மாறுகிறார். அதன் பின் என்ன நடக்கிறது தங்கச்சி என்ன ஆனார்? என்பதே மீதி கதை.

படத்தின் ப்ளஸ்:

படத்திற்கான கதையுடன் டைட்டில் பொருந்தியுள்ளது. அண்டே பிக்கிலி என்ற தீம் மியூசிக்கின் ஐடியா சிறப்பாக இருந்தது.

ஹீரோவாக வரும் விஜய் ஆண்டனி சிறப்பாக நடித்துள்ளார்.

தங்கச்சி சென்டிமென்ட் ஒர்கவுட் ஆகியுள்ளது.

பின்னணி இசை படத்திற்கு பலம்.

கதையின் மைனஸ்:

பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகம் போல அதன் இரண்டாம் பாகம் இல்லை

முதல் 50 நிமிடங்களிலேயே கதையில் தொய்வு ஏற்பட்டு தூக்கம் வந்துவிடுகிறது.

இறுதி அலசல்:

கதை சொல்லும் விதத்தில் கவனம் செலுத்தி இருக்கலாம்.

காட்சிகள் நன்றாக இருந்தாலும் மோசமான VFX அதை கெடுத்துவிடுகிறது.

மொத்தத்தில் படம் ஒரு முறை பார்க்கலாம்

படத்தின் மதிப்பெண் :2/5

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 597

    5

    0