பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ‘பீட்சா 3 தி மம்மி’ … பாடல்கள் எப்படி இருக்கு…? Music Review இதோ…!!

Author: Vignesh
16 February 2023, 12:45 pm

வித்தியாசமான கதைக்களத்தில் முன்னணி இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘பீட்சா’. இந்த படத்தில், விஜய் சேதுபதி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நல்ல விமர்சனங்களை பெற்றது.

pizza movie -updatenews360

இதையடுத்து, பீட்சா படத்தின் 2-ம் பாகமும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இந்த இரண்டு படங்களின் தொடர்ச்சியாக தற்போது 3-ம் பாகமும் உருவாகியுள்ளது. இதில் அறிமுக இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கியுள்ளார். பீட்சா 3 படத்தில் நடிகர் அஷ்வின் ஹீரோவாக நடித்துள்ளார்.

pizza movie -updatenews360

‘பீட்சா 3 தி மம்மி’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரித்துள்ளார். பீட்சா 3 படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார். இவர்களுடன் காளி வெங்கட், இயக்குனர் கவுரவ் நாராயணன், ரவீனா தஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் வருகிறார்கள்.

pizza movie -updatenews360

இதனிடையே, பீட்சா 3 தி மம்மி’ படத்திற்கு அருண் ராஜ் இசையமைத்துள்ளார். இவர் 2019 -ம் ஆண்டு ‘தடம்’ திரைப்படத்திற்கு இசையமைத்து அப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

pizza movie -updatenews360

‘தடம்’ படத்தில் பாராட்டுக்குரிய பாடல்களை வழங்கிய அருண் ராஜ், தற்போது ‘பீட்சா 3 தி மம்மி’யில் இரண்டு அருமையான பாடல்களை வழங்கியுள்ளார். இது நிச்சயமாக இசை ஆர்வலர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 751

    1

    0