ப்ளீஸ் குடும்பத்தோடு பார்க்காதீங்க… அடல்ட் படத்தில் நடித்து அசிங்கப்படும் ரானா!
Author: Shree14 March 2023, 1:56 pm
ப்ளீஸ் குடும்பத்தோடு பார்க்காதீங்க… அடல்ட் படத்தில் நடித்து அசிங்கப்படும் ரானா!
பிரபல தென்னிந்திய நடிகர் ரானா தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழித் திரைப்பட நடிகரான இவர் லீடர், கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டும் அல்லாமல் தமிழில் ஆரம்பம் படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், பாகுபலி 2, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். மிஹீகா பஜாஜ் என்பவரை 2020ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
தொடர்ந்து நடித்து வரும் ராணா தற்போது ரானா நாயுடு என்ற வெப் தொடரில் நடித்து ஓ.டி.டி தளத்தில்வெளியாகியுள்ளது. இதில் அளவுக்கு மீறிய மோசமான 18+ காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்தனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரானா, “எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள். இந்த வெப் சீரிஸை குடும்பத்துடன் பார்க்காதீர்கள். தனியாகப் பாருங்கள்” என்று கூறியுள்ளார்.