பிரபல நடிகையின் வீட்டருகே பிரம்மாண்ட பங்களா கட்டும் அரசியல் கட்சி தலைவர்.. அப்படி எதுவும் இல்ல!
Author: Udayachandran RadhaKrishnan19 March 2025, 3:03 pm
நடிகையின் வீட்டருகே பிரபலங்கள் வீடு கட்டினால் அது எப்போதும் வைரலாவது சாதாரணமான விஷயம்தான்.
அந்த வகையில் தற்போது கனடாவில் இருந்து சென்னைக்கு மீண்டும் திரும்பியுள்ளார் 90களின் கனவுக்கன்னி நடிகை ரம்பா.
இதையும் படியுங்க: நீ நடிச்சது போதும் கிளம்பு..வடிவேலுவை துரத்திவிட்ட பாரதிராஜா..எந்த படம்னு தெரியுமா.!
சினிமாவில் கோலோச்சி கொண்டிருந்த ரம்பா, கணவருடன் கனடாவில் செட்டில் ஆனார். அங்கு 2 மகள், ஒரு மகனுடன் வசித்து வந்த அவர், கணவருடை தொழிலை கவனித்து வந்தார்.

பின்னர் மீண்டும் இந்தியா வந்த ரம்பாவுக்கு, ரியாலிட்டி ஷோக்களில் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் ரம்பா, சென்னையில் சொந்த வீட்டில் குடும்பத்துடன் செட்டிலாகியுள்ளார்.

சமீபத்தில் பேட்டியளித்த அவர், என்து வீட்டருகே தற்போது கமல் சார் பெரிய பங்களா கட்டி வருகிறார். அதே பிரபுதேவா மாஸ்டரும் அருகில் உள்ளதால், அவர் வீட்டுக்கு செல்வேன், சினேகாவும் அருகில் தான் உள்ளார் என கூறியுள்ளார்.