விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு போலீசார் குவிப்பு – தொண்டர்கள் பதற்றம்!

Author: Shree
2 December 2023, 6:50 pm

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகிறார். கட்சிப் பணிகளில் இருந்து ஒதுங்கிய அவர், குடும்பத்தின் அரவணைப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில், தீபாவளி பண்டிகையை குடும்பத்தோடு கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சூழலில், கடந்த 18ம் தேதி விஜயகாந்த் திடீரென சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விஜயகாந்த்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா கேட்டுக் கொண்டார்.

பின்னர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு நுரையீரல்‌ சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர்‌ விரைவில்‌ பூரண உடல்நலம்‌ பெறுவார்‌ என்று நம்புகிறோம்‌. அவருக்கு இன்னும்‌ 14 நாட்கள்‌ மருத்துவமனையில்‌ தொடர்‌ சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் சற்றுமுன் கிடைத்துள்ள தகவலின் படி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை மியாட் மருத்துவமனை முன்பு பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து திரைத்துறையை சேர்ந்த பலர் மருத்துவமனைக்கு விரைந்து செல்வதாகவும் செய்திகள் கூறுகிறது. இதையடுத்து தொண்டர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 433

    0

    0