பிரபல நடிகரின் மகன் கைது? கஞ்சா வழக்கில் டுவிஸ்ட் : சென்னையில் பரபரப்பு!
Author: Udayachandran RadhaKrishnan3 December 2024, 12:58 pm
தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற மன்சூர் அலிகான், திரையுலகில் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகராக உள்ளார். அவரின் மகன் துக்ளக் அலிகான், சிறிய கதாபாத்திரங்களில் நடித்து திரைத்துறையில் தனது இடத்தை உறுதிப்படுத்த முயல்கின்றார்.
இதையும் படியுங்க: கீர்த்தி சுரேஷை வீடு தேடி பெண் கேட்ட பிரபல நடிகர் : உண்மையை உடைத்த இயக்குநர்!
இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டில், துக்ளக் அலிகான் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் முடிவில், அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் அல்லது சந்தேகவாசி என காவல்துறையினர் கண்காணிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விசாரணை தொடர்பாக சென்னை திருமங்கலம் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.