நயன்-விக்கி இரட்டை குழந்தை விவகாரம்: ‘சினிமா தனத்தால் சீர்கெடும் தமிழ் இளைஞர்கள்’… விளாசிய அரசியல் பிரபலம்..!
Author: Vignesh12 October 2022, 12:45 pm
நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது. இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது என விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
விக்னேஷ் சிவன், நயன்தார தம்பதிக்கு ரசிகர்கள், மற்றும் திரைத்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பலர் திருமணம் ஆகி 4 மாதங்களே ஆன நிலையில் இருவரும் பெற்றோர் ஆனது எப்படி என கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான கிருஷ்ணசாமி, நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் தம்பதி 4 மாதங்களில் தாயானது குறித்து விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில், தமிழ் சினிமாதனத்தால் தமிழ் இளைஞர்கள் சீர்கெடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டிருப்பதாவது, ‘சீருடையில் உள்ள பள்ளி மாணவிக்கு பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் ஹீரோயிசம்.! திருமணமான 4 மாதத்தில் குழந்தை பிறந்ததாக அறிவிக்கும் சூப்பர் ஹீரோயின்.!
தமிழ் சினிமா தனத்தால் சீர்கெடும் தமிழ் இளைஞர்கள் – கலாச்சாரம் – பண்பாடு’. என குறிப்பிட்டுள்ளார்.