கட்டப்பா வீட்டில் குளறுபடி…மகள் மகன் எடுத்த அதிரடி முடிவு…குழப்பத்தில் சத்யராஜ்..!
Author: Selvan21 January 2025, 2:31 pm
சத்யராஜ் குடும்பத்தில் அரசியல் போர்
தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சத்யராஜ்,இவர் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.மேலும் இவரது திரைப்படங்களில் வரும் வசனங்கள் பெரும்பாலும் கடவுள் மறுப்பு கொள்கையை மையமாக வைத்து இருக்கும்,அதுமட்டுமில்லாமல் இவர் திராவிட கட்சிகளின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வருபவர்.
இந்த நிலையில் இவருடைய மகளான திவ்யா சத்யராஜ் சில நாட்களுக்கு முன்பு மு.கஸ்டாலின் முன்னனிலையில் திமுக கட்சியில் இணைந்தார்.இவருக்கு கட்சி தொண்டர்கள்,நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் சத்யராஜின் மகனான சிபி சத்யராஜ் தீவிர விஜய் ரசிகர் என்பதால் அவர் விஜயின் தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இதையும் படியுங்க: வருங்கால மாஸ் நடிகரின் லீலை…மீண்டும் அந்த பிரபலத்தின் மனைவியுடன் தொடர்பு..!
இவர் கடந்த காணும் பொங்கல் அன்று தன்னுடைய X-தளத்தில் சுயவிவரத்திற்கு கீழே நடிகர்/கூத்தாடி என பதிவிட்டு இருந்தார்.சமீபத்தில் விஜய் அரசியல் இறங்கியதை கூத்தாடி என்று சிலர் விமர்சித்த நிலையில்,தற்போது நடிகர் சிபி சத்யராஜ் தன்னை கூத்தாடி என்று குறிப்பிட்டு விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
Thank you brother 🙏🏻 https://t.co/DjUPKghY3V
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) January 17, 2025
இதனால் சத்யராஜ் குடும்பத்தில் அரசியல் பனிப்போர் ஆரம்பித்துள்ளது.மகன் மற்றும் மகள் வெவ்வேறு கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருவதால் சத்யராஜ் மிகுந்த குழப்பத்தில் உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.