அந்த விஷயத்தில் விஜய் பயந்தாங்கோலி… ஓடவிட்டுட்டாங்க – மனுஷன் அரசியல் எப்படி சமாளிப்பாரு?

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தொடர்ந்து மக்கள் சேவையில் இறங்கினர். அதே போல் அண்மையில் விஜய் 234 தொகுதிகளிலும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா நடத்தி அரசியல் என்ட்ரி குறித்து பேசி தமிழகம் முழுக்க கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ள பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு, விஜய் அரசியலுக்கு வருவது என்பது அவருக்கே உள்ளுக்குள்ள கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது. ஆம், காரணம், விஜய் பெரிய கூட்டத்தை பார்த்தால் பயந்துவிடுவார். தன் ரசிகர்களே லட்சக்கணக்கில் கூடிவிட்டால் அங்கிருந்து எப்படி பாதுகாப்பாக வெளியேறுவது என படபடத்து போய்விடுவார். அப்படித்தான் பாண்டிசேரியில் ஒரு சம்பவம் நடந்தது.

தற்போது விஜய்யின் அரசியல் ஆசானாக, அவரது நிழலாக, அவருடைய இன்னொரு மனசாட்சியாக இருக்கும் புஷ்லி ஆனந்தின் மகள் திருமணத்திற்கு விஜய் சென்றிருந்தார். பெரும்பாலும் விஜய் பொது நிகழ்ச்சிகளுக்கு போகவே மாட்டார். ஆனால் அன்று பல முன்னேற்பாடுகளுடன் தான் சென்றார். இருந்தும் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து திணறிப்போன விஜய் சுவர் ஏறி குதித்து தப்பித்து ஓடிவந்ததை இன்றுவரை மீம்ஸ் போட்டு ட்ரோல் செய்கிறார்கள். இப்படி இருக்கிறவர் அரசியல் எப்படி சமாளிப்பார் என்பது கேள்வி குறியாக உள்ளது என செய்யாறு பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

Ramya Shree

Recent Posts

இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் : சீமானுக்கு நீதிபதி எச்சரிக்கை!

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…

4 minutes ago

திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ

எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

7 minutes ago

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு; அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் உருவாகும் திரைப்படமா?

அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…

43 minutes ago

வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் அடித்த நட்சத்திர ஜோடி.. மண்டை மேல இருக்க கொண்டையை மறந்துட்டீங்களே!

சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…

51 minutes ago

வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…

யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…

2 hours ago

கசிந்த தகவல்..அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…

3 hours ago

This website uses cookies.