சினிமாவின் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும் போதே இப்படியா.. தைரியமான மனிதன் : விஜய்யை புகழ்ந்து தள்ளிய பிரபலம்!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2024, 7:00 pm

சினிமாவின் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும் போதே இப்படியா.. தைரியமான மனிதன் : விஜய்யை புகழ்ந்து தள்ளிய பிரபலம்!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள நடிகர் விஜய், அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு பல வருடங்களாக இருந்தது. தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிளை செய்து வந்த விஜய், கடந்த 2 வருடமாக அரசியல் கட்சி துவங்குவதில் தீவிரம் காட்டி வந்தார்.

இந்த நிலையில் நடிகர் விஜயின் அரசியல் கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டெல்லி தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்தார். “விஜய் மக்கள் இயக்கம்” என்பதை அரசியல் கட்சியாக பதிவு செய்து “தமிழக வெற்றி கழகம்” என அரசியல் கட்சி தொடங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

இதை விஜய் ரசிகர்கள் வரவேற்று இனிப்புகளை வழங்கி பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகன்றனர். சினிமாவில் உள்ள பிரபலங்களும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி, திரை உலகில் உச்சத்தின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள்பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன், பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும்.. உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா என பதிவிட்டுள்ளார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?