பொங்கல் ரேஸில்”மதகதராஜா”வெற்றி நடையா…கலக்கலான கமெண்ட்களை அள்ளி விடும் ரசிகர்கள்..!

Author: Selvan
12 January 2025, 12:41 pm

களைகட்டிய மதகதராஜா திரைப்படம்

கடந்த 12 வருடமாக ரிலீஸ் ஆகாம இருந்த மதகதராஜா திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி இன்று திரைக்கு வந்துள்ளது.

Madha Gaja Raja movie audience comments

இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிகரித்தது.அதுமட்டுமல்லாமல் படக்குழு படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளிலும் மும்மரம் காட்டியது.

இதையும் படியுங்க: இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!

எப்போதும் காமெடி கலந்த கமர்சியல் படங்களை இயக்கி,ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் சுந்தர் சி இப்படத்தை இயக்கியுள்ளார்.படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என படத்தின் ட்ரைலரை பார்க்கும் போதே தெரிந்தது,அதுமட்டுமல்லாமல் படம் 2012 ஷூட் பண்ணதால் சந்தானத்தின் அல்டிமேட் பஞ்ச் வசனத்தை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள மதகதராஜா திரைப்படத்தின் பிரீமியர் ஷோ பார்த்த ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்ககளை X-தளத்தில் பதிவிட்டு வந்துள்ளனர்.

பலரும் இப்படத்தை குடும்பத்தோடு தியேட்டர் சென்று பார்க்கலாம்,நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பக்கா காமெடி படம் வந்துள்ளது என மதகதராஜா படத்தை கொண்டாடி வருகின்றனர்.

  • Rashmika Mandanna injured at gym பெரும் சோகத்தில் மூழ்கிய ராஷ்மிகா மந்தனா…சிக்கந்தர் படப்பிடிப்பை நிறுத்திய படக்குழு..!
  • Leave a Reply