நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படமும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படமும் இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது. இந்த இரு படங்களிலுமே, அதிக ரசிகர்களைக் கொண்ட கோலிவுட் டாப் ஹீரோக்கள் நடித்துள்ளதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படத்தை முதல் முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி உள்ளதாலும், விஜய் முதல் முறையாக நேரடி தெலுங்கு படத்தில் நடித்துள்ளதாலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதே போல் இயக்குனர் எச்.வினோத் அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படத்தை, ஏற்கனவே அஜித்தை வைத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள மூன்றாவது முறையாக இயக்கி உள்ளதால், கண்டிப்பாக இந்த திரைப்படம் ஹாட்ரிக் வெற்றி பெறும் என அஜித் ரசிகர்கள் இந்த படத்தை வரவேற்க காத்திருக்கிறார்கள்.
அதேவேளையில், இருபெரும் நடிகர்களின் படங்கள் என்பதால், எந்தப் படம் அதிக திரையரங்குகளில் வெளியாகும் என்ற கேள்வி எழுந்து வந்தது. துணிவு படத்தை ஆளும் கட்சியின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியீட்டு உரிமத்தை பெற்றிருப்பதால், வாரிசுக்கு திரையரங்குகள் சமஅளவில் கிடைக்குமா..? என்ற சந்தேகமும் எழுந்தது. இறுதியில், பொங்கலுக்கு 15 நாட்களே இருந்த நிலையில், இரு படங்களும் சமஅளளவிலான திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், துணிவு 11ம் தேதியும், வாரிசு 12ம் தேதியும் வெளியாகும் என தகவல் வெளியாகி வந்த நிலையில், ரசிகர்களும் கொண்டாட்டத்துடன், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில், துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் ஒரே நாளில், அதாவது 11ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம், 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.
இதுக்கு முன்பாக, 2014ல் நடிகர் விஜய்யின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் படங்கள் ஒரே நாளில் ரிலீஸானது. இதில், வீரம் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த முறை யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்ற போட்டி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது மக்கள நீதி மையம். இக்கட்சியின் தலைவராக இருப்பவர் நடிகர் கமல்ஹாசன். கடந்த மக்களவை…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் பகுதிக்கு அருகேயுள்ள அரிச்சல்பட்டிஎன்ற ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த தம்பான்…
This website uses cookies.