தேசிய விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” மொத்தம் எத்தனை தெரியுமா?

Author:
16 August 2024, 3:18 pm

புதுடெல்லியில் 70வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மொழிக்குமான சிறந்த படங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் வெளியான படங்களில் பொன்னியின் செல்வன் பாகம் 1க்கு அதிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன்:

2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 4 தேசிய விருதுகளை அள்ளியது மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்-1’ தமிழின் சிறந்த படம்.

விருதுகளின் விவரம் பின்வருமாறு:

சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலிப்பதிவு மற்றும் ஒளிப்பதிவு என 4 பிரிவுகளில் தேசிய விருது.

1. சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு அறிவிப்பு.

2. பொன்னியின் செல்வன் படத்திற்கு சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது அறிவிப்பு.

3. சிறந்த சவுண்ட் டிசைனர் விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு அறிவிப்பு.

4. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது ரவிவர்மனுக்கு அறிவிப்பு.

திருச்சிற்றம்பலம் :

தனுஷ் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்றுள்ள “மேகம் கருக்காத பெண்ணே பெண்ணே” பாடலுக்கு சிறந்த நடன இயக்கத்துக்கான விருது ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தப் படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  • singampuli shared the experience on mayandi kudumbathar movie நான் நடிக்கவே மாட்டேன்னு சொன்னேன், ஆனா அவர்தான் என்னைய?- ஓபனாக போட்டுடைத்த சிங்கம்புலி…