ஹாலிவுட்டில் சோழர்கள்..! முதன்முறையாக தமிழ்படம் செய்துள்ள சாதனை: பட்டையை கிளப்பும் பொன்னியின் செல்வன் வசூல்..!

Author: Vignesh
15 October 2022, 9:21 am

பாதி கற்பனை, மீதி நிஜக்கதை என கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலக அளவிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது பொன்னியின் செல்வன். சிலர் இப்போதே இரண்டாம் பாகத்தை வெளியிடுங்கள் என்று கூறி வருகின்றனர்.

ponniyin-selvan-updatenews360 3

நாளுக்கு நாள் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மொத்தம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் போட்ட பணத்தை விரைவில் எடுத்துவிடும் என தெரிகிறது. தற்போது உலகம் முழுவதும் இதுவரை படம் ரூ.400+ கோடிக்கு மேல் வசூலை தாண்டியுள்ளது.

ponniyin-selvan-updatenews360 3

பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆகி உலகம் முழுவதும் ரூ.400+ கோடி வரை வசூலித்துவிட்டதாம். விரைவில் ரூ.500 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.

பொன்னியின் செல்வன் படம் தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலில் மாஸ் காட்டுகிறது. தற்போது என்னவென்றால் இப்படம் USAவில் மட்டுமே ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாம். இதுவரை எந்த ஒரு தமிழ்ப்படமும் ஒரே இடத்தில் ரூ.50 கோடியை வசூலித்தது இல்லையாம்.

ponniyin-selvan-updatenews360 3
  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!