நடிகர், நடிகைகளுக்கு கோடியில் சம்பளம் கொடுத்து குளிப்பாட்டிய லைகா – பாவம் நிலைமை இப்படி ஆகிப்போச்சே!

Author: Shree
23 May 2023, 4:31 pm

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் 1950 முதல் 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர் கதையாக வெளியிடப்பட்டது. இது மக்களை வெகுவாக கர்ந்ததால் நான்குமுறை கல்கி வார இதழிலேயே மீண்டும் தொடராக வெளிவந்தது. இதற்கு இருந்து பேராதரவை வைத்து 1954-ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

தற்போது அந்த புத்தகத்தின் அடிப்படையாக திரைப்படமாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்திருந்தார்கள்.

மிகப்பெரும் பொருட்செலவில் உருவான இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. அதன் தொடர்ச்சியாக 2ம் பாகம் கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு 10 கோடியும், விக்ரமுக்கு – 12 கோடியும், ஜெயம்ரவிக்கு 8 கோடியும், திரிஷாவுக்கு – 5 கோடியும், கார்த்திக்கு 5.5 கோடியும், ஐஸ்வர்யா லட்சுமி , பிரகாஷ் ராஜ், பிரபு போன்ற நட்சத்திரங்களுக்கு சுமார் 1.5 கோடியும், சோபிதா, ஜெயராமுக்கு ரூ. 1 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் சுமார் 500 கொடிகள் செலவு செய்து படமெடுத்த லைக்கா எப்படியாவது போட்ட பணத்தை எடுக்கவேண்டும் என ப்ரோமோஷனுக்காக நடிகர் நடிகைகளை பல இடங்களுக்கு வரவைத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதற்கு சுமார் 10 கோடிக்கு மேல் செலவுசெய்தார்களாம். ஆனால், படம் 335 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 535

    4

    2