சுத்த வேஸ்ட்…? பொன்னியின் செல்வன் 2 முதல் விமர்சனம் – ரசிகர்கள் அதிருப்தி!
Author: Shree27 April 2023, 8:54 pm
மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் வரலாற்று நாடகத் திரைப்படமான பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி சரித்திர வெற்றி படைத்தது. அதையடுத்து இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி (நாளை) வெளியாகிறது. லைக்கா தயாரிக்கும் இப்படத்தின் முன்பதிவு டிக்கெட் மட்டும் உலக அளவில் ரூ. 11கோடி வசூல் பெற்று சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் திட்டமிட்டபடி ’பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியாகிறது.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் வெளிநாட்டின் தணிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவர் பொன்னியின் செல்வன் 2 பார்த்துவிட்டு ” படம் நன்றாக இல்லை” என எதிர்மறையான விமர்சனத்தை கூறியுள்ளார். இதனால் எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.