ஆன்மீகம் பற்றி பேசி சர்ச்சை கிளப்பியவர் ஏ எல் சூர்யா. இவர் நடிகை திரிஷா என் மனைவி தான் என்று கூறி பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்தது சில தினங்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டது. அது மட்டும் அல்லாமல் நடிகர் விக்ரம் சீக்கிரம் இறந்துவிடுவார் என ஜோசியத்தில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இப்படி பல பிரபலங்கள் குறித்து கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சைக்கோ தனமா நடந்துக்கொள்ளும் ஏ எல் சூர்யா, தான் திரிஷாவை பல வருடங்களாக காதலித்து வருவதாகவும் வருகிற நவம்பர் மாதம் திருமணம் செய்துக்கொள்ளப்போவதாகவும் கூறி சர்ச்சை கிளப்பினார். மேலும் த்ரிஷா தற்போது விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து வருவது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் விஜய் அவளுடன் நடிக்க கூடாது என்றெல்லாம் ஒருமையில் திட்டி பதிவிடுவார்.
மேலும், நானும் திரிஷாவும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வோம். இப்போது எங்களுக்குள் சின்ன சண்டை அதனால் நாங்கள் பேசிக் கொள்வதில்லை. லியோ படத்தில் இருந்து அவளை வெளியேற்றுங்கள். திரிஷாவுடன் விஜய் நெருக்கமாக நடித்தால் ஒதப்பட்டு போவார் என கிறுகிறுக்க தனமாக பேசியுள்ளார். இது தளபதி ரசிகர்களையும், த்ரிஷா ரசிகர்களையும் கோபத்திற்கு உள்ளாகியது.
தான் ஒரு இசையமைப்பாளர் என்றும் இயக்குனர் என்றும் கூறிக்கொண்டு வரும் ஏஎல் சூர்யா கடந்த 2006 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பிரபு என்பவரிடம் நடிகை பத்மப்ரியாவை வைத்து பாரதியார் பாடல்களை ஒளிப்பதிவு செய்தும் தரும்படி கேட்டு பத்மப்ரியாவை தொலைபேசியில் தொந்தரவு செய்து இருக்கிறார்.இதையடுத்து பத்மபிரியா ஏஎல் சூர்யாவின் மீது புகார் அளித்திருக்கிறார். அப்போ பத்மபிரியா இப்போ திரிஷா என தொடர்ந்து நடிகைகளை டார்ச்சர் செய்து வரும் ஏஎல் சூர்யா கைது செய்யப்படவேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் 2 ரிலீசாகாது என்றும் தான் ஒரு மாமன்னர், என் உத்தரவுக்கு பின் வெளியாகும் என கூறியுள்ளார் அப்படியில்லையேல் மண்ணோடு மண்ணாகிவிடும் என்று வாய்க்கு வந்த படி பேசியுள்ளார். இவரை இதுக்குமேலும் விட்டு வைக்க கூடாது என ரசிகர்கள் பலர் கூறி அவரை விமர்சித்துத்தள்ளியுள்ளனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.