பொன்னியின் செல்வன் 3-ம் பாகமா..? ஜெயம் ரவி கொடுத்த அப்டேட்..!
Author: Vignesh29 April 2023, 10:45 am
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் 1950 முதல் 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இது மக்களை வெகுவாக கர்ந்ததால் நான்குமுறை கல்கி வார இதழிலேயே மீண்டும் தொடராக வெளிவந்தது. இதற்கு இருந்து பேராதரவை வைத்து 1954-ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.
தற்போது அந்த புத்தகத்தின் அடிப்படையாக திரைப்படமாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ளார்.
மிகப்பெரும் பொருட்செலவில் உருவான இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. அதன் தொடர்ச்சியாக 2ம் பாகம் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பொன்னியின் செல்வன் 3ம் பாகம் வருமா என செய்தியாளர்கள் நடிகர் ஜெயம் ரவியிடம் கேட்டதற்கு அவர் சிரித்துவிட்டு ‘BYE’ என தெரிவித்துவிட்டு சென்று இருக்கிறார். அதுவரை பல கேள்விகளுக்கு பதில் சொன்ன ஜெயம் ரவி இந்த கேள்விக்கு மட்டும் டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டார்.
இதற்கு முன்னதாக, மணிரத்னம் PS 3ம் பாகம் படம் வருமா என்ற கேள்விக்கு, ‘நிச்சயம் வரும், ஆனால் அதை யார் எடுப்பார்கள் என தெரியாது’ என தெரிவித்து இருந்தார். அதனால் பொன்னியின் செல்வன் 3ம் பாகம் வர வாய்ப்பில்லை என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.