பொன்னியின் செல்வன் படத்திற்கு இரண்டு விதமாக விமர்சனத்தை கொடுத்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். சினிமா உலகில் வெளிவரும் திரைப்படங்களை கிண்டலாகவும், கேலியாகவும் விமர்சனம் செய்து வருபவர் தான் ‘ப்ளூ சட்டை மாறன்’.
இவர் பிரபலமான ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமானாலும் பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் செய்து இருக்கிறார். இவருடைய விமர்சனங்களால் படத்தின் வசூல் பாதிக்கப்படுகிறது என சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் புலம்பி கொட்டுகின்றனர்.
ஆனால், இவருடைய வீடியோக்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமும் இருந்து தான் வருகிறது. இவருக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைபர் உள்ளார்கள். மேலும், தன்னைத்தானே விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு திரைப்படங்களை சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். படத்தில் இருக்கும் நிறைகளை பேசுவதைவிட குறைகளை பேசுவது தான் அதிகம். இதனால் இவரை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி இருக்கின்றன.
அதிலும் அஜித்தின் வலிமை படத்தை குறித்து இவர் தாறுமாறாக பேசி இருந்ததால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கொந்தளித்து ப்ளூ சட்டை மாறனை திட்டி இருந்தார்கள். இதற்கு இடையில் இவர் ஒரு படம் ஒன்று எடுத்து இருந்தார். இவர் முதலில் உதவி இயக்குனராக தான் பணிபுரிந்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் படங்களை விமர்சனம் செய்வதில் இறங்கிவிட்டார். இப்படி ஒரு நிலையில் இவர் ‘ஆன்டி இந்தியன்’ என்ற படத்தை இயக்கி இருந்தார்.
பல சர்ச்சைகளுக்கு பின் வெளியான இந்த படம் சரியாக ஓடவில்லை. இதில் அவரே நடித்திருந்தார். இதனால் இந்த படம் வந்த வேகத்திலேயே காணாமல் போனது என்று சொல்லலாம். சமீபத்தில் பார்த்திபன், கெளதம் மேனன் என்று பலரும் இவரது விமர்சனத்தை நேரடியாக கண்டித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் நேற்று வெளியான பொன்னியின் செல்வன் படத்தை விமர்சனம் செய்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல இந்த படத்தை கழுவி ஊற்றி இருக்கிறார். அதுவும் முதல் பாதியில் படத்தை புகழந்து தள்ளி இருந்தார். பின்னர் இது பொன்னியின் செல்வனை ஆஹா ஓஹோ என்று புகழும் முட்டு பாய்ஸ்க்கு தான் இப்படி சொன்னேன் என்று கூறிவிட்டு பின்னர் வழக்கம் போல இந்த படத்தை வெச்சி செய்து இருக்கிறார்.
இந்த படத்தின் செட் வொர்க் ரேபரேஷன்ஸுக்கு பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி இந்த படத்தை எல்லாம் பார்த்தார்களா இல்லையா. ஆர்ட் ஒர்க் எல்லாம் கேவலமாக இருக்கிறது. இந்த படத்தை pride of indian சினிமானு வடக்கன் கிட்ட காண்பிச்சா பான் பராக்க போட்டு துப்பிடுவான். மேலும், இந்த படம் தெலுங்கு படம் என்று படத்தின் ஓனரே சொல்லிவிட்டார் என்று சுஹாசினி ஆந்திராவில் பேசிய வீடியோவை சுட்டிக்காட்டி இருக்கிறார்.
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
அரியலூர் ஜெயங்கொண்டம் ஆண்டிமடத்தில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்படும்…
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம்…
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.…
நஷ்டத்தில் தத்தளிக்கும் லைகா லைகா நிறுவனம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததை தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தது.…
This website uses cookies.