வசூல் வேட்டையில் ‘பொன்னியின் செல்வன் 1’ எந்த திரைப்படமும் செய்திராத மிகப்பெரிய வசூல் சாதனை..! ஒரே நாளில் இத்தனை கோடியா..?

Author: Vignesh
1 October 2022, 4:00 pm

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியானது. எதிர்பார்த்தை விட பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தமிழகம் முழுவதும் பெரிய வரவேற்ப்பு கிடைத்திருக்கிறது.

மேலும் இன்னும் ஒரு வாரத்திற்கு இப்படத்தின் முன்பதிவு நிறைவாக இருக்கிறது, அந்தளவிற்கு படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. ஆம், அதன்படி இப்படம் முதல்நாளில் மட்டும் ரூ.80+ கோடிகள் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதன்மூலம் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை ரிலீசான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படம் என்கிற சாதனையை பொன்னியின் செல்வன் படைத்துள்ளது. அதேபோல் மணிரத்னம் இயக்கத்தில் இதுவரை ரிலீசான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்! 
  • Close menu