ஏன் என்னாச்சு.. ஏங்க இப்படி பண்றீங்க..? கவலையில் ‘நானே வருவேன்’ படக்குழு.. அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்.. !
Author: Vignesh3 October 2022, 5:00 pm
தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் படத்திற்கு ஏற்பட்ட நிலை குறித்து அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸானது. படம் ரிலீஸான இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ.150 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. மூன்று நாட்களில் ரூ.230 கோடி வசூல் செய்திருக்கிறது.
டிக்கெட்
பொன்னியின் செல்வன் படம் ஓடும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது. எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்று பலர் சமூக வலைதளங்களில் புலம்புவதை பார்க்க முடிகிறது. இந்த வார இறுதி நாட்களுக்கு கூட தமிழகத்தில் டிக்கெட் கிடைப்பது கடினமாக இருக்கிறது.
தனுஷ்
பொன்னியின் செல்வனை ரசிகர்கள் கொண்டாடினாலும் நானே வருவேன் படமும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஷோக்கள் குறைக்கப்பட்டிருப்பதால் வசூலும் குறையும். தனுஷ் படம் நன்றாக ஓடும் போது ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தியேட்டர்
பொன்னியின் செல்வன் படத்திற்கான டிக்கெட் கேட்டு பலரும் வருவதால் தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளனர். அதாவது தமிழகத்தில் இருக்கும் பல தியேட்டர்களில் நானே வருவேன் பட ஷோக்களை குறைத்துக் கொண்டு அதற்கு பதில் பொன்னியின் செல்வனை திரையிடுகிறார்கள். அதுவும் இன்று முதல்.