உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” இனிதே பூஜையுடன் துவங்கியது !!

Arabi production  சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும்  Viyan ventures சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க,  உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்” பூஜையுடன் இன்று நவம்பர் 28, 2022 இனிதே துவங்கியது.

அமெரிக்காவில் செய்யாத குற்றத்திற்காக நீண்ட காலம் சிறையில் இருப்பவர்களைக் கண்டுபிடித்து அவர்களை நிரபராதிகள் என நிரூபித்து அதற்கு அவர்களுக்கு அரசாங்கம் தரும் இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்டவருக்குப் பெற்றுத்தரும் நிறுவனத்தைப் பற்றிய உண்மை கதையின் அடிப்படையில், சென்னை பின்னணியில்  இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இருக்கை நுனியில் ரசிகர்களை இருத்தி வைக்கும் பரபரப்பான திரில்லராக உருவாகும் இப்படத்தை, இயக்குநர் வினோத் ராஜேந்திரன் இயக்குகிறார். இப்படதில் முக்கியமான வேடத்தில் நடிகர் சார்லி கதையின் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார்.  இவர்களுடன் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர் நடிகை தாரணி மற்றும் நடிகை பிரானா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடந்தேறியது. இப்படத்தின் படப்பிடிப்பை  சென்னை மற்றும் இராம்நாடு பகுதிகளில் இரண்டு கட்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் – Arabi production  & Viyan ventures
தயாரிப்பாளர் – ரஜீஃப்  சுப்பிரமணியம்  
இயக்கம் – வினோத் ராஜேந்திரன்
ஒளிப்பதிவு – பிரசாந்த் வெள்ளிங்கிரி
எடிட்டர் – தமிழ்குமரன்
கலை இயக்கம் – அஜய் சம்பந்தம்
இசை – சூர்ய பிரசாத்
மக்கள் தொடர்பு – ராஜா

Poorni

Recent Posts

அந்த தியாகி யார்? டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கவனத்தை ஈர்த்த அதிமுக எம்எல்ஏக்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…

38 minutes ago

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

2 days ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

2 days ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

2 days ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

2 days ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

2 days ago

This website uses cookies.