‘நான் கேட்கறத தரல’னா நடிக்க மாட்டேன்..?’ வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை..!

Author: Udayachandran RadhaKrishnan
25 December 2022, 8:45 pm

தமிழ் மொழியில் முகமூடி என்னும் படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இத்திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் இவர் நடித்த சில படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கவே, அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

pooja hegde - updatenews360.jpg 1

பின்னர், 10 வருட இடைவெளிக்கு பிறகு, தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரது நடிப்பில் சமீபத்தில் சர்க்கஸ் என்ற ஹிந்தி திரைப்படம் வெளிவந்தது. இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றார். இப்படி நிலையில் நடிகை பூஜா ஹெக்டே குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அதாவது, கேட்கும் சம்பளம் தரவில்லை என்றால் பூஜா ஹெக்டே நடிக்க மாட்டார் என்று கூறப்பட்டது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை பூஜா ஹெக்டே, ‘கதை நன்றாக இருந்தாலும் நான் கேட்ட சம்பளம் தராவிட்டால் அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று பரவி வரும் தகவல் உண்மை கிடையாது.. நான் பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து நடிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் இவ்வளவு தூரம் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க மாட்டேன். நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது பெரிய சவாலாக இருந்து வருகின்றது. சம்பளத்தை முக்கியமாக வைத்து கிடைத்த படங்களில் நடித்திருந்தால் நான் எப்போதோ காணாமல் போயிருப்பேன் என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளம் எங்கும் வைரலாகி வருகின்றது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 676

    2

    2