கோடிக்கணக்கில் சம்பளம்… கார், பங்களான்னு மளமளன்னு சொத்து சேர்க்கும் பூஜா ஹெக்டே!

Author: Shree
26 October 2023, 5:05 pm

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பின்னர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட்படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார்.

தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார். மேலும், Social Media- வில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படத்தினை பதிவிடுவார்.

இந்நிலையில் தற்போது பூஜா ஹெக்டே குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பூஜா ஹெக்டே, Range Rover சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். அதன் விலை ரூ. 4 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜா ஹெக்டே மிகக்குறுகிய காலத்திலே அதிகம் சொத்து சம்பாதித்து வைத்துவிட்டார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ. 66 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்திற்கு ரூ. 4 முதல் 6 கோடி சம்பளம் வாங்குகிறார். அவர் சினிமாவில் நடிக்க வந்த மிகக்குறுகிய காலத்திலே அதிகமான சொத்து சேர்த்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 399

    1

    0