ரஜினிகாந்தின் கூலி படத்தில் இணைந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. ரஜினிகாந்த், நாகார்ஜுனா, செளபின் சாகிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினம், தாய்லாந்து, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நேற்று பூஜா ஹெக்டே இணைந்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதன்படி, கூலி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் பூஜா ஹெக்டே நடனமாடி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், இதன் படப்பிடிப்பும் சென்னையில் நடந்துள்ளது.
முன்னதாக, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி, சில காட்சிகளிலும் நடித்திருந்தார் தமன்னா. மேலும், அவர் நடனமாடிய காவாலா என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதே பாணியிலே, ஒரு பாடலுக்கு மட்டும் கூலி படத்தில் பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளதாகவும், இந்தப் பாடலும் அனிருத் இசையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
இதையும் படிங்க: பெற்ற தாயே பிள்ளைகளின் படுக்கைக்கு அனுமதி.. தந்தையால் சிக்கிய மனைவியின் கள்ளக்காதலர்கள்!
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், விஜய் – பூஜா ஹெக்டே நடனமாடிய ஹலமித்தி ஹபிபோ என்ற பாடல் யூடியூபில் 700 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கியுள்ளது. இருப்பினும், படம் வெற்றி பெறாததால், பூஜா ஹெக்டேவை தயாரிப்பு நிறுவனம் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரம், படத்தின் நாயகன் விஜய், அரசியலை நோக்கி, அதிலும் தயாரிப்பு நிறுவனம் மையம் கொண்டுள்ள திமுகவை எதிர்த்து பயணிப்பதால், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தக்கூட குழுவினர் முயலவில்லை என்றும் சொல்லப்படுகிறது. எது எப்படியோ, பூஜாவின் நடனம் கன்ஃபார்ம் என்ற நிம்மதியில் ரசிகர்கள் உள்ளனர்.
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
அஜித் நடிப்பில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும்…
நெட்பிளக்ஸில் விரைவில் வெளியாகும் படம் டெஸ்ட். மாதவன், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இதையும்…
This website uses cookies.