பல தோல்வி படங்கள்.. திடீரென அதிரடி முடிவை எடுத்த பிரபல நடிகை… இப்படி ஒரு ட்விட்ஸ்டை யாருமே எதிர்பாக்கல..!

Author: Vignesh
17 February 2023, 7:15 pm

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. மேலும் சில வருடங்களுக்கு முன், இவர் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார்.

pooja hegde - updatenews360.jpg 1

இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார்.

பீஸ்ட் வசூல் ரீதியாக ஓரளவு நல்ல வரவேற்பு இருந்தாலும் கூட விமர்சன ரீதியாக அப்படத்திற்கு வரவேற்பு கொஞ்சம் கூட இல்லை என்று சொல்லலாம். அதே போல் தான் ராதே ஷ்யாம், ஆச்சாரியா, எலிஜபில் பேச்சிலர் மற்றும் சர்க்கஸ் ஆகிய அனைத்து படங்களும் தோல்வியில் முடிந்தது.

இதனிடையே, இப்படங்களில் எல்லாம் நடிக்கும் பொழுது ரூ.3 முதல் ரூ.3.5 கோடி வரை சம்பளம் வாங்கி வந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே தற்போது திடீரென தனது சம்பளத்தை குறைத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

pooja hegde - updatenews360.jpg 1

தற்போது ஒரு கோடி ரூபாய் வரை நடிகை பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை குறைந்து விட்டதாக கோலிவுட் வட்டாரத்தால் பேசப்பட்டு வருகிறது. பூஜா தனது சம்பளத்தை குறைக்க முந்தைய படங்களின் தோல்வி தான் காரணம் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 600

    3

    3