உனக்கு 56 எனக்கு 32… பட வாய்ப்பை காட்டி முரட்டு சிங்கிள் நடிகரின் காதல் வலையில் விஜய் பட நடிகை..?

Author: Vignesh
9 December 2022, 6:00 pm

2012-ல தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்துள்ளார்.

pooja hegde - updatenews360.jpg 1

மேலும் சில வருடங்களுக்கு முன், இவர் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார்.

மேலும், ஹிந்தியில் புதிதாக உருவாகி வரும் படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்து வருகிறார்.

pooja hegde salman khan - updatenews360

இந்நிலையில், படப்பிடிப்பின் போது நடிகர் சல்மான் காணும் நடிகை பூஜா ஹெக்டேவும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் சமீபகாலமாக ஒன்றாக அதிக நேரம் செலவழித்து வருகிறார்களாம். மேலும் சல்மான் கான் தயாரிப்பு நிறுவனத்தில் இன்னும் இரு திரைப்படங்களில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

இவை அனைத்தும் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வெளிவந்த தகவல் என கூறப்படுகிறது. 56 வயதாகும் நடிகர் சல்மான் கான் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 749

    0

    0