2-வது முறையாக விஜய்க்கு ஜோடியான பிரபல நடிகை – “தளபதி 69” ஹீரோயின் இவங்க தான்!

Author:
2 அக்டோபர் 2024, 2:00 மணி
vijay
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தளபதி விஜய் தற்போது தளபதி 69 திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த திரைப்படமே விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்கும் என கூறுகிறார்கள்.

இந்த படத்தில் நடித்து முடித்து அடுத்ததாக விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார். அதன் பிறகு சினிமாவுக்கு டாட்டா காட்டி விடுவார். எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

thalapathy 69

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் நோக்கி உருவாகி வரும் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே வி என் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது .

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகரான பாபி தியோல் கமிட் ஆகி இருப்பதாக பட குழு அதிகாரப்பூர்வமாக நேற்று புதிய போஸ்டருடன் அறிவித்திருந்தார்கள். அந்த வகையில் தற்போது இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க போகிறார்கள் என்ற ஒரு கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

pooja hegde

இந்த நிலையில் தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக அதை அறிவித்திருக்கிறது. ஆம் இந்த திரைப்படத்தின் நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என புதிய போஸ்டருடன் படக்குழு தெரிவித்திருக்கிறது.

இதையும் படியுங்கள்: மனைவியுடன் விவாகரத்து…? ஏறி மிதிப்பாங்க – தீயாய் பரவும் செல்வராகவன் பதிவு!

முன்னதாக நடிகை பூஜா ஹெக்டே விஜய்யுடன் சேர்ந்து பீஸ்ட் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் இரண்டாவது முறையாக விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கம்மிட் ஆகி இருக்கிறார்.

  • TN Sec தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் ஏன்? தேர்தல் கணக்கு போடும் திமுக : இன்னும் பலர் மாற வாய்ப்பு!
  • Views: - 51

    0

    0

    மறுமொழி இடவும்