எங்க வீட்டுல விஷேஷம்… குதூகலமான புகைப்படங்களை வெளியிட்ட பூஜா ஹெக்டே!

Author: Rajesh
4 January 2024, 7:46 pm

மிக குறுகிய காலத்திலேயே தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை மிகச்சரியாக பயன்படுத்திக்கொண்டு முன்னணி நடிகையாக இடத்தை தக்கவைத்தவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவின் வித்தியாச படைப்பாளினியான மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2012-ல் தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த படம் இவருக்கு அறிமுகத்தை கொடுத்தபோதிலும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. படம் தோல்வியை சந்திக்க தமிழின் முதல் படத்திலேயே ஓரம்கட்டப்பட்டுவிட்டார் பூஜா ஹெக்டே. அதன் பின்னர் கோலிவுட்டில் வாய்ப்புகளே கிடைக்காததால் பாலிவுட் பக்கம் தலைகாட்ட ஆரம்பித்தார். அங்கும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான மொஹன்சதாரோ திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய தோல்வி கொடுத்தார். இதனால் பாலிவுட் காரர்களாலும் ஓரம் கட்டப்பட்டுவிட்டார் பூஜா ஹெக்டே.

பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் தலைகாட்டி தொட்டதெல்லாம் ஹிட் கொடுத்து டாப் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்தார். அடுத்தடுத்த வாய்ப்புகள் டோலிவுட்டில் கிடைக்க அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்து சமந்தாவுக்கே செம டஃப் கொடுத்தார். அதன் பின்னர் மீண்டும் தமிழ் , தெலுங்கில் வாய்ப்புகள் தேடிவர ஒரு ரவுண்ட் அடித்து வருகிறார்.

இந்நிலையில் பூஜா ஹெக்டேவின் சகோதரியின் திருமணம் கோலாகலமாக நடைபெறுகிறது. அதன் haldi விழா இன்று நடந்து முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்களை பூஜா ஹெக்டே இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!