ஜுனியர் எம்.ஜி.ஆர் நடிப்பில் கிரைம் திரில்லர் படமாக உருவாகாவுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தின் பூஜை இன்று துவக்கம்..!

Author: Vignesh
6 December 2022, 4:30 pm

Third Eye Creations சார்பில் MD விஜய் தயாரிப்பில், கிரிஷா குரூப் ஜீனியர் எம்.ஜி.ஆர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, இயக்குநர் தமிழ் தியாகராஜன் இயக்கத்தில் உருவாகும் புதிய க்ரைம் திரில்லர் திரைப்படம், “Production No. #2” இன்று இனிதே பூஜையுடன் துவங்கியது.

எம்.ஜி.ஆரின் தோட்டமான சென்னை ராமவரம் தோட்டத்தில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள இப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் ஜீனியர் எம்.ஜி.ஆர், நடிகர் ஆனந்த்பாபு, இயக்குநர் மோகன் ஜி, சந்தோஷ் பிரதாப், விஜய் டிவி புகழ், உதயா, சிலுமிசம் சிவா, வையாபுரி, இயக்குநர் தமிழ், , பிக்பாஸ் டேனியல் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.

junior mgr - updatenews360

பெண் கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் கிரிஷா குரூப் நாயகியாக நடிக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழ் தியாகராஜன் இயக்குகிறார். முக்கிய வேடத்தில் ஜீனியர் எம்.ஜி.ஆர் நடிக்கிறார்.

புதுமையான க்ரைம் திரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஆனந்த்பாபு, உதயா ரவி, சிலிமிசம் சிவா, ஹிட்லர், காதல் சுகுமார், சானா கான் ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

junior mgr - updatenews360

தொழில் நுட்ப குழு விபரம்

தயாரிப்பு நிறுவனம் : Third Eye Creations

தயாரிப்பாளர் : MD விஜய்

ஒளிப்பதிவு : சரவணன் ஶ்ரீ

எடிட்டர் : MD விஜய்

திரைக்கதை & வசனம் : MD ஆனந்த்

கதை & இயக்கம் : தமிழ் தியாகராஜன்

மக்கள் தொடர்பு : மணவை புவன்

படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த விபரம் மற்றும் படம் குறித்த தகவல்கள் விரைவில் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

junior mgr - updatenews360
  • Allu Arjun Pushpa 2 Global Successடாப் கியரில் புஷ்பா 2…மெகா வசூலால் பதிலடி கொடுக்கும் அல்லு அர்ஜுன்..!
  • Views: - 432

    0

    0