நடிகை பூர்ணாவுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்து..!

கேரள மாவட்டம் கண்ணூர் பகுதியில் பிறந்தவர் நடிகை பூர்ணா இவரது இயற்பெயர் சமுனா காசிம் ஆகும். படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக் கொண்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும் இருந்து வருகிறார் பூர்ணா.

இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் பரத் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக பூர்ணா ஹீரோயினாக நடித்திருந்தார்.

தமிழில் பூர்ணா நடித்த முதல் படம் இதுதான். இதன்பிறகு பூர்ணாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.தொடர்த்து கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடிவீரன், சவரகத்தி, எவனுக்கு எங்கேயோ, மச்சம் இருக்கு, அடங்கா மறு, காப்பான், லாக் அப் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

2021ல் வெளிவந்த தலைவி படத்தில் இவர் வி.கே.சசிகலாவாக நடித்துள்ளார். தொடர்ந்து பேய் படங்களில் பேயாக நடித்து இருந்ததால் “தி இந்து” பத்திரிக்கை அவரை “தெலுங்கு படங்களின் பேய் ராணி” என்று முத்திரை குத்தியது. அவனு (2012) மற்றும் அதன் தொடர்ச்சியான அவுனு 2 (2015) ஆகிய படங்களில் அவர் பாராட்டுகளைப் பெற்றார்.

அவுனு படத்தில் பேயாக நடித்ததால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவரை திகில் படங்களில் நடிக்க வைக்க வழிவகுத்தது. ராஜூ காரி காதி (2015) இல் பேயாக நடித்ததற்காக மேலும் பல பாராட்டுக்களைப் பெற்றார்.

இந்த நிலையில் அவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

அதன் பின் மூன்று மாதங்கள் கழித்து தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் பூர்ணா. வளைகாப்பு புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆகி இருந்தது.

இந்நிலையில் இன்று பூர்ணாவுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை உடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது பூர்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Poorni

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

10 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

11 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

12 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

13 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

15 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

16 hours ago

This website uses cookies.