பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி மக்களிடையே நன்கு பரீட்சியமாகிவிட்டார். இவர் ‘அருவி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர். அந்த படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.
அப்படத்தை தொடர்ந்து ‘வாழ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வேறு எந்த ஒரு படத்திலும் பார்க்க முடியவில்லை. இதனிடையே பிரதீப் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார்.
அந்நிகழ்ச்சியில், ஆரம்பம் முதலே மக்களிடத்தில் நல்ல அபிப்ராயத்தை பெற்ற பிரதீப் எதிர்பாராத விதமாக பெண்களுக்கு பாதுகாப்பில்லை என கூறி ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதால், கோபமடைந்த அவரது ரசிகர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், தொகுப்பாளர் கமல் ஹாசன் மற்றும் இணை போட்டியாளர்களைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கடுமையாக கண்டனம் தெரிவித்து வந்தனர்.
பிரதீப்பின் வெளியேற்றத்திற்கு ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிக்காட்டிய நிலையில், பிரதீப்போ ஜாலியாக அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டார். அதாவது, நிறைய தயாரிப்பாளர்கள் அவரை அனுகி உள்ளார்களாம். விரைவில், படம் பண்ண போறேன் என டுவிட் செய்திருக்கிறார்.
இந்நிலையில், பூர்ணிமா 16 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறி இருக்கிறார். அதனால், அது நல்ல முடிவு என எல்லோரும் பூர்ணிமாவை பாராட்டி வருகின்றனர். மேலும், பூர்ணிமாவின் ரசிகர்கள் சிலர் பிரதிப்பை வம்பு இழுக்க தற்போது, பிரதிப் ஒரு விஷயத்தை கோபமாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது குறித்து பூர்ணிமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பூர்ணிமா நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை. ஒரு நாள் இது எல்லோருக்கும் புரியும். அப்போ எல்லாமே எல்லோருக்கும் தெரியும் என பேசியுள்ளார். கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பூர்ணிமா தடுமாறியுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.