தனுஷை பார்த்தாலே.. படுக்கையறை காட்சி குறித்து பிக்பாஸ் பூர்ணிமா OpenTalk..!

Author: Vignesh
13 March 2024, 6:29 pm

சமீப காலமாக யூடியுப் போன்ற சமூக வலைத்தளம் மூலமாக பிரபலமானவர்கள் அதிகம். ஏறத்தாழ சினிமா பிரபலங்களை விட, யூடியூப் பிரபலங்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் அதிக ரசிகர்களை கொண்டவர்தான் பூர்ணிமா என்னும் அராத்தி.

கலர் முக்கியமில்லை திறமைதான் முக்கியம் என்று தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் நிரூபித்துக் காட்டினார். இவருடைய ஆரத்தி என்ற சேனலுக்கு மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் உள்ளனர்.

மெல்ல மெல்ல சினிமாவில் நுழைந்து வரும் பூர்ணிமா முன்னதாக தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கிளாமர் புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை பரபரப்பில் வைத்திருந்தார். பின்னர் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியேறிய பூர்ணிமா ரவி, சிவப்பு என்ற படத்தில் நடித்து அந்த படம் திரைக்கு வந்தது.

poornima ravi - updatenews360

இதனிடையே, சமீபத்தில் பேட்டியொன்றில், கலந்து கொண்ட பூர்ணிமாவிடம் தொகுப்பாளர் படுக்கையறை காட்சியில், நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், படுக்கையறை காட்சிகள் எதுவாக இருந்தாலும் அது கதையுடன் ஒத்துப் போக வேண்டும். திணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. மேலும், ரொமான்ஸ் அல்லது படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

poornima ravi - updatenews360

மேலும், ஒரு சில படங்களில் நடித்துள்ள பூர்ணிமா ரவி தனக்கு பிடித்த நடிகர் தனுஷ் என்றும், எந்த ரோல் கொடுத்தாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு எந்த எல்லைக்கும் அவர் செல்வது தனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது என்று கூறினார். மேலும், பக்கத்து வீட்டு பையன் என்ற ரோல் கொடுத்தாலும் திரையரங்கிற்கு அவருக்காக பார்வையாளர்கள் வருவார்கள் என்றும், அதேபோன்று நடிப்பு திறமை நடிகை திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 306

    0

    0