விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. இதனிடையே, திடீரென ரெட் கார்ட் மூலமாக பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் விவாத பொருளாக மாறியது.
இதற்கு முன் எந்த சீசனிலும் இதே போன்று விதிகள் மீறப்பட்டதில்லை. ஒரு பக்கம் மாயா மற்றும் பூர்ணிமா விதிகளை மீறினால் மற்றொரு பக்கம் அர்ச்சனா மற்றும் விசித்ரா விதிகளை மீறி வருகின்றனர். இது ஒரு பக்கம் என்றால் தறைக்குறைவான வார்த்தைகளை பேசிக் கொள்வது என்பது தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்து வருகிறது. முதலாவது ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளரை தான் தரைக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார்கள்.
தற்போது, பிக் பாஸை கூட விட்டு வைக்கவில்லை. பிக் பாஸ் 7 நிகழ்ச்சி மிகவும் போர் அடிக்கிறது என பூர்ணிமா பேசியுள்ளார். மேலும், தனது செருப்பை எடுத்து பிக் பாஸ் சுவருக்கு மேல் தூக்கி வீசுகிறார் பூர்ணிமா. இப்படி செய்ய வேண்டாம் என மற்ற போட்டியாளர்கள் சிலர் கூறியும் கூட, கேட்காமல் செருப்பை தூக்கி வீசுகிறார். இதை கவனித்த ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். மேலும் இப்படியெல்லாம் செய்யலாமா என்றும், வார இறுதியில் என்ன நடக்க போகிறதோ என கூறுகின்றனர்.
தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…
"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…
மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…
டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…
சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
This website uses cookies.