குட்டி பையான இருந்தா பூவையாரா இது? கல்லூரி இளைஞனாக மீண்டும் சூப்பர் சிங்கரில் கலக்கும் வீடியோ!
Author: Shree30 June 2023, 1:20 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ். விஜய் டிவியில் பொடியனாக வந்து பெரிய அளவில் பேமஸ் ஆன கப்பீசுக்கு தமிழகம் முழுக்க கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பிரியங்காவை கலாய்த்து தள்ளுவார்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 சீசனில் டைட்டில் வென்ற பூவையாருக்கு திரைப்படங்களில் பாடல் பாடும் வாய்ப்புகளும் கிடைத்தது. மேலும் திரைப்படங்களில் கூட நடித்தும் வருகிறார். 2019ம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். தொடர்ந்து, நடிப்பு பாடல் என படு பிசியாக இருந்து வரும் பூவையார் தற்போது மீண்டும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அசத்தினார்.
ஆம், சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் பூவையார் கலந்துக்கொண்டு பாடல் பாடியுள்ளார். மிகவும் உயரமாக ஆள் நெடுநெடுவென வளர்ந்துவிட்டிருக்கிறார். தற்ப்போது பூவாயார் காலேஜ் படிக்கிறாராம். இதைக்கேட்டு மாகாபா செம ஷாக் ஆகிவிட்டார். இந்த லேட்டஸ்ட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.