பூவே உனக்காக பட நடிகை அஞ்சு அரவிந்தின் பெரிய மகளா? அட செம அழகா இருக்காங்களே..!
Author: Vignesh25 January 2024, 12:24 pm
விக்ரம் இயக்கத்தில் பூவே உனக்காக படத்தில் நடிகர் விஜய், நடிகை சங்கீதா, நடிகை அஞ்சு அரவிந்த், நம்பியார், நாகேஷ், மலேசியா வாசுதேவன் என நடிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படம் விஜய்க்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுத்தது என்று சொல்லலாம். இந்த படத்திற்கு விஜய் உருகி உருகி காதலிக்கும் பெண்ணாக அஞ்சு அரவிந்த் நடித்திருப்பார். மலையாள படங்களிலும் நடித்திருந்தார்.
இவர் திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை நிறுத்தி அஞ்சு அரவிந்த் தனது குடும்பத்துடன் நேரம் செலவழித்து அதனுடைய புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்தும் வருகிறார். இந்த நிலையில், நடிகை அஞ்சு அரவிந்த் தனது மகளுடன் ஒரே மாதிரியான உடையணிந்து வெளியிட்டுள்ள போட்டோ இப்போது இணையதளத்தில் வைரலாகி அட இவர்களுக்கு இவ்வளவு பெரிய பொண்ணு இருக்கா என்று ரசிகர்கள் புகைப்படத்திற்கு அதிக லைக் கொடுத்து வருகின்றனர்.