மருத்துவமனையில் ICU பிரிவில் பிரபல இளம் நடிகர்… அறுசை சிகிச்சை செய்ய ஏற்பாடு!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2025, 8:15 pm

தமிழ், தெலுங்கு மொழி சினிமாக்களில் பரபரப்பாக நடித்து வரும் இளம் நடிகர் தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்க : நான் என்ன அவ்ளோ மோசமாகவா நடிக்கிறேன்…ராயன் பட நடிகர் வேதனை.!

யாருடா மகேஷ் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷான். தொடர்ந்து மாநகரம், கேப்டன் மில்லர், ராயன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சந்தீப் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

சந்தீப்புக்கு சைனஸ் பிரச்சனை உள்ளதால் கழுத்து, தலையை சுற்றி வலி அதிகமாக உள்ளதாம். இதனால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

ஆனால் மருந்துகளால் குணப்படுத்த முடியாது என கூறிய மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

sundee

தெலுங்கு படமான மஜாகா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இது குறித்து பேசிய அவர், இந்த படம் வெளியான பின் ஓய்வு எடுத்து உடல்நிலையை கவனிக்கப் போவதாக கூறியுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!