‘நீ விஜய்யுடைய மேனேஜர் தானே’… என்று கூறி முகத்தில் சிகரெட் புகையை ஊதிய பிரபல நடிகர்: அதிர்ச்சியில் தளபதி..!

Author: Vignesh
9 February 2023, 12:00 pm

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாகவும், உச்சத்தில் உள்ள நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளர் நடிகர் விஜய். நேரில் அமைதியாக இருக்கும் விஜய், கேமரா முன்னே வந்தால் நடிப்பு, நடனம் என அதகளப்படுத்துவார்.

இவர் பிரபல இயக்குநராக வலம் வருபவர் எஸ்ஏ சந்திரசேகர் இவரது ஒரே மகன் விஜய். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள விஜய்க்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மட்டுமின்றி மாஸ் நடிகராகவும் உள்ளார் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் அவரது அப்பாதான்.

Vijay Twit -Updatenews360

அப்பாவின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமான விஜய் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இந்த அளவுக்கு தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்துள்ளார்.

இந்தநிலையில், பி.டி. செல்வகுமார் விஜய்யிடம் சில வருடங்களுக்கு முன்பு இருந்து PRO-வாக பணிபுரிந்து வந்தவர். இவர் ஒன்ஸ் மோர் படத்தில் துவங்கிய கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யுடன் பயணித்து வருகிறார்.

vijay-updatenews360

நடிகர் விஜய் கூட மேடை ஒன்றில் பேசும் பொழுது தன்னுடைய வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவர் பி.டி. செல்வகுமார் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

vijay-sudeep-updatenews360

இந்நிலையில் பி.டி. செல்வகுமார் விஜய்யின் புலி படத்தை தயாரித்து இருந்தார். இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க பிரபல நடிகர் கிச்சா சுதீபின் கால்ஷீட் கேட்டு பி.டி. செல்வகுமார் சென்று இருந்த போது, ‘நீ விஜய்யுடைய மேனேஜர் தானே’ என்று கூறி பி.டி. செல்வகுமார் முகத்தில் சிகரெட் பிடித்து நடிகர் சுதீப் அந்த புகையை ஊதினாராம். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பி.டி. செல்வகுமார் இந்த சம்பவம் குறித்து மன வருத்தத்துடன் பகிர்ந்து இருந்தார்.

vijay-sudeep-updatenews360

  • VJ Sangeetha Instagram post love announcement புத்தாண்டில் காதலை அறிவிச்ச சீரியல் நடிகை…வீடியோ வெளியிட்டு இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 689

    0

    0