அந்த படத்தின் கிளைமாக்ஸ் பிடிக்கவில்லையாம்.. தனுஷ் உடன் நடிக்க மறுத்த பிரபல நடிகர்..! அவார்ட் போச்சே குமாரு..!
Author: Vignesh2 January 2023, 3:00 pm
தமிழ் திரையுலகில் வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனராக இருப்பவர் வெற்றி மாறன். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரைத்துரையில் அறிமுகமானார். பொல்லாதவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இருவரின் கூட்டணியும் ஆடுகளம் படத்தில் களமிறங்கியது.
சேவல் சண்டையை மையமாக வைத்து 2011 ம் ஆண்டு ஆடுகளம் என்னும் படத்தை வெற்றிமாறன் இயக்கினார். இதில் தனுஷுக்கு ஜோடியாக டாப்சி நடித்திருந்தார். ஆடுகளம் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்தார். மேலும் இந்த படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என ஐந்து விருதுகளை தட்டி சென்றது.
இப்படத்தில் பல துணை கதாபாத்திரங்கள் இருந்தாலும் ஆடுகளம் படத்தில் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது பேட்டைக்காரன் என்னும் கதாபாத்திரம். இதில் நடிகர் ஜெயபாலன் சிறப்பாக நடித்திருந்தார்.
இந்நிலையில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகரும், இயக்குனருமான பார்த்திபன். ஆடுகளம் படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் இவருக்கு பிடிக்கவில்லையாம். அதனால் இப்படத்தில் நடக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது இதற்கு பலரும் பல வித கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.