அரிய வகை நோய்? சமந்தாவை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலகும் பிரபல வாரிசு நடிகர்..!!!
Author: Udayachandran RadhaKrishnan17 October 2024, 10:50 am
அரிய வகை நோய் காரணமாக சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க பிரபல நடிகர் முடிவு செய்துள்ளார்.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்துடன் வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்த இவர் பல படங்களில் கமிட் ஆனார்.
தமிழ், மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகராக மாறியுள்ளார். தற்போது துல்கரின் தந்தை மம்முட்டி என சொல்லும் அளவுக்கு உயர்ந்துள்ள அவர், தற்போது லக்கி பாஸ்கர் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாத அவர் சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார். அதில் இனி நான் படத்தில் நடிக்கப் போவதில்லை, அதிக படங்களில் கமிட் ஆகியதால் என் உடல்நிலையில் கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டேன்.
அதனால் என் உடல்நிலையில் தற்போது கவனம் செலுத்த உள்ளேன். சிறிது காலம் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு உடலை கண்காணிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: விஜய் படத்தை பார்த்து கால் மணி நேரத்திலே தூங்கிட்டேன்…. இப்படி சொல்ல ஒரு தைரியம் வேணும்!
சமீபத்தில் சமந்தா மயோசிடிஸ் நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சிறிது காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் தற்போதுதான் மெல்ல மெல்ல சினிமா நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வருகிறார்.
துல்கர் சல்மானும் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.