கட்சியை ஆரம்பிக்கும் பிரபல நடிகர் : விஜய் கட்சியுடன் கூட்டணி போட முடிவு?!

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2024, 7:57 pm

திரைப்பட மற்றும் தொலைக்காட்சி ஷூட்டிங்குக்கான கட்டணங்களை குறைக்கும் முடிவை எடுத்த பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவிக்க, நடிகர் பார்த்திபன் அவரை நேரில் சந்தித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பல விஷயங்களில் தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

விஜயின் அரசியல் ஈடுபாடு குறித்தும், அவரது தற்போதைய முடிவுகளையும் பார்த்திபன் ஆதரித்தார். திமுகவை எதிர்ப்பதில் விஜய் எடுத்த முடிவு சரியானது என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்க: எல்லா ஏரியாவிலும் கில்லி.. இத்தனை கோடிக்கு அதிபதியா உதயநிதி ஸ்டாலின்?

மேலும், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் எதிர்க்கட்சியாக இருந்து வெற்றிபெற்றது போலவே, இது விஜயின் அரசியல் யுக்திக்கு உதவும் முக்கியமான மாற்றமாக இருக்கும் என கருத்து தெரிவித்தார்.

Parthiban Political Entry and joint with TVK

அவரது பேச்சின் முக்கியமான பகுதி, தனக்கான அரசியல் ஆர்வம் மற்றும் எதிர்கால திட்டங்களைப் பற்றிய உணர்ச்சிமிகு அறிவிப்பாக அமைந்தது. “நான் அரசியலுக்கு வர வேண்டும் என பலரும் கேட்கிறார்கள், ஆனால் அது முறையாகும் போது நான் அறிவிப்பேன்,” என பார்த்திபன் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சரத்குமார், விஜயகாந்த், பாக்யராஜ், விஜய் போன்ற பலர் அரசியலுக்கு சென்றதன் பின்னணி பாராட்டப்பட்ட நிலையில், பார்த்திபனின் இந்த கருத்துகள் தமிழ் சினிமா துறையிலும் அரசியல் வட்டாரங்களிலும் ஆர்வத்தை தூண்டியுள்ளன.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 141

    0

    0