விஜய், அஜித்தை ஓரங்கட்டிய பிரபல நடிகர் : தென்னிந்திய அளவில் சாதனையை படைத்து அசத்திய தமிழ் நடிகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2023, 6:31 pm

இந்திய மனித பிராண்டுகள் நிறுவனம் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிராண்ட்ஸ்) நடத்திய சமீபத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டது.

தென்னிந்தியா முழுவதும் நம்பர் 1 பிரபலமாக சூர்யா முதல் இடத்தில் உள்ளார். நான்கு தென்னிந்திய மாநிலங்களிலும் நவம்பர் 2022 – டிசம்பர் 2022 வரையில் 6 ஆயிரம் பேரிடம் இதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

நம்பிக்கை, அடையாளம் தெரிதல், கவரும் தன்மை, மரியாதை போன்றவற்றின் அடிப்படையில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. விஜய், பிரபாஸ், ராம் சரண் போன்ற பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி சிறந்த தென்னிந்தியப் பிரபலமாக சூர்யா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த ஆய்வு தென்னிந்தியாவில் பிரத்தியேகமாக நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த ஆய்வில் நம்பிக்கை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுன் மற்றும் விஜய் தேவரகொண்டா முன்னிலை வகித்தனர்.

தமிழில் விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் முன்னணியில் உள்ளனர். மலையாளம் மற்றும் கன்னடத்தில் பகத் பாசில் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.

மிகவும் அடையாளம் காணப்பட்டவர்கள் பட்டியலில் சூர்யா, தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ் மற்றும் ராம் சரண் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளார். மேலும் தமிழ் இண்டஸ்ட்ரியில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியை விட முன்னணியில் உள்ளார்.

கன்னட மற்றும் மலையாள சினிமாவில் முறையே யாஷ் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முன்னணியில் உள்ளனர். தென்னிந்தியாவின் மிகவும் கவர்ச்சியான நடிகர் என்ற பட்டியலில் தெலுங்கு நட்சத்திரங்களான அல்லு அர்ஜுன் மற்றும் விஜய் தேவரகொண்டாவை விட சூர்யா முன்னணியில் உள்ளார்.

தமிழில் விஜய் உள்ளார். துல்கர் சல்மான் மற்ற இரண்டு மாநிலங்களிலும் நம்பர்-1 ஆக இருந்தார். தென்னிந்தியாவின் மிகவும் மரியாதைக்குரிய நட்சத்திரமாக சூர்யா முதலிடம் பிடித்தார். அகில இந்திய அளவில் அமிதாப் பச்சன் இந்தியாவின் மிகவும் நம்பகமான நட்சத்திரமாக உள்ளார்.

  • Enai Noki Paayum Thota controversy தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!