சத்யராஜ் கூட இருக்கிற இந்த குட்டி பையன் யாருன்னு தெரியுமா?.. அட இவரு பயங்கரமான நடிகர் ஆச்சே..!
Author: Vignesh20 March 2024, 1:35 pm
80களின் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத நடிகராக சத்யராஜ் இருந்து வருகிறார். முதலில் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வந்த சத்யராஜ் அதன் பிறகு தான் நடிகராக மாறினார். இவரின் பள்ளிக்கால நண்பரான மணிவண்ணனுடன் சத்யராஜு இணைந்து பல படங்களில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அது மட்டுமல்லாமல் மணிவண்ணன் இயக்கிய பெரும் படங்களில் சத்யராஜ் நடித்து, இவர்களில் காம்பினேஷனில் நிறைய படங்கள் வெற்றியை கண்டுள்ளது.
கதாநாயகன் வில்லன் குணசித்திர கதாபாத்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் பெரியாரின் தீவிர வெறியன் ஆகவும் இருந்திருக்கிறார். மேலும் தந்தை பெரியாராக நடித்த திரைப்படத்தில் ஊதியம் வாங்காமல் சத்யராஜ் அந்த படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சத்யராஜ் உடைய சினிமா கேரியரில் நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, ரிக்ஷா மாமா, வில்லாதி வில்லன், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை போன்ற படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். இப்படி திரைத்துறையில் மதிப்புமிக்க ஒரு நடிகராக இருப்பவர் சத்யராஜ்.
இந்நிலையில், தற்போது சத்யராஜுடன் இருக்கும் ஒரு சிறுவனின் புகைப்படம் யார் என்ற கேள்வி ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை மலையாள திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் பகத் பாசில்தான் தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள பகத் பாசில் தனது சிறுவயதில் நடிகர் சத்யராஜ் உடன் இருக்கும் புகைப்படம் தற்போது, ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.