நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். முதல் படத்திலே ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடிய துருவ் நல்ல பரீட்சியமான நடிகராக பார்க்கப்பட்டார்.
தொடர்ந்து அதன் பிறகு தனது தந்தை விக்ரம் உடன் மகான் படத்தில் நடித்திருந்தார். துருவ் விக்ரமுக்கு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி படங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனாலும் அவருக்கு இளம் பெண் ரசிகைகள் கூட்டம் அதிகம் தான். அதனால் துருவ் விக்ரம் படங்களுக்கு நல்ல மவுஸ் உண்டு.
முதல் படத்தில் தனக்கு ஹீரோயினாக நடித்த பனித்தா சந்துவுடன் நெருக்கமாக பழகி காதலித்து வருவதாக அவ்வவ்போது செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால், இதனை இருவரும் உறுதிப்படுத்துவே இல்லை. இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் ஹோட்டல் ஒன்றில் இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்ட புகைப்படம் ஒன்று லீக்காகி பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், துருவிக்ரம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை துவங்கவில்லை. கபடி போட்டியை மையப்படுத்தி எடுக்கவிருக்கும் இந்த படத்திற்காக கபடி பயிற்சியை துருவிக்ரம் எடுத்து வருகிறார்.
இதனிடையே, தன் சொந்த தயாரிப்பில், வாழை என்னும் திரைப்படத்தை மாரி செல்வராஜ் எடுக்க உள்ளார். இதன்பின்னர், துருவிக்ரம் படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். இந்த படத்தில் துருவிக்ரமுக்கு ஜோடியாக அனுப்பமா பரமேஸ்வரன் தான் நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இப்படத்தின் கதாநாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் பிரபல நடிகை தர்ஷனா ராஜேந்திரன் என்பவர் தான் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும், மலையாளத்தில் வெளிவந்த ஹிருதயம், ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, தமிழிலும், வெளிவந்த கவன் மற்றும் இரும்புத்திரை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.